Showing posts with label கோழி வளர்ப்பு. Show all posts
Showing posts with label கோழி வளர்ப்பு. Show all posts

Saturday, 17 March 2012

கோழிப்பண்ணை மேலாண்மை, குஞ்சு பொரிப்பகத்தின் பராமரிப்பு


கோழிப்பண்ணை மேலாண்மை

கோழிப்பண்ணை மேலாண்மை என்பது நல்ல உற்பத்தியைப் பெறக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிக் கூறுவதாகும். உற்பத்தித் திறனை அதிகரிக்க நல்லப் பராமரிப்பு முறைகளைக் குறைந்த செலவில் செய்தல் வேண்டும். இதுவே அறிவியல் பூர்வமான கோழிப்பண்ணை மேலாண்மையாகும்.

குஞ்சு பொரிப்பகத்தின் பராமரிப்பு

அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை முற்றிலும் முட்டையை அதில் வைப்பதற்கு முன்னரே ஒரு முறை சோதனை செய்து ஏதேனும் குறையிருந்தால் சரிசெய்யவேண்டும். நன்கு கழுவி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். இது நோய்ப் பரவலின் தன்மையைக் குறைக்கும்.
poultry_hatchery
குஞ்சு பொரிப்பகம்
40 சதவிகிதக் கரைசலில் 40 மிலி ஃபார்மால்டிஹைடு, 20 கிராம் பொட்டாசியம் ஃபர்மாங்கனேட் கரைசல் ஒவ்வொரு 2.8 மீட்டர் 3 இடைவெளிக்கும் அடைக்காப்பான் மற்றும் பொரிப்பகத்தினுள் ஊற்றவேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட்டை கண்ணாடி அல்லது மண்பாத்திரத்திலும், ஃபார்மலினை அதன் மீதும் ஊற்றிவிடலாம். புகையூட்டுதலை முட்டை வைப்பதற்கு முன் தினம் செய்து அறையைப் பூட்டிவிடவேண்டும். இது வெப்பநிலையை சரியாக நிர்வகிக்க உதவும்.
பொரிப்பகத்தில வேலை செய்பவர்கள் உள்ளே செல்லுமுன் குளித்து உடைகள், காலணிகளை மாற்றிக்கொண்டு செல்லவேண்டும். குஞ்சுகள் விற்பனை செய்யும் போது முறையாக இரசீது வழங்கி உடனுக்குடனே அனுப்பிவிடவேண்டும். மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் சமயங்களில் மின்சாரம் உண்டாக்கும் சாதனம் (ஜெனரேட்டர்) பயன்படுத்தலாம்.

கூளங்கள், சுகாதாரம், அடைக்காக்கும் வீடு


கூளங்கள்

மரத்தூள், நெல் உமி போன்ற கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி 5 செ.மீ அளவிற்குக் கூளங்களை உருவாக்கவேண்டும். பூஞ்சாண் எளிதில் வளரும் பொருட்களைப் பயன்படுத்துதல் கூடாது. கூளங்கள் கட்டி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவேண்டும். அம்மோனியா வாயு உருவாகாமல் தடுக்க ஈரமடைந்த கூளங்களை உடனுக்குடன் அகற்றிப் புதிய கூளங்களை அவ்விடத்தில் போடவேண்டும்.

சுகாதாரம்

கொட்டகையிலிருந்து அகற்றக்கூடிய தீவன, நீர்த்தொட்டிகள், கருவிகள், கூளங்கள் போன்றவைகளை நீக்கிவிட்டு ஒரு நல்ல கிருமி நாசினியைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தி கொட்டகையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒட்டுண்ணி மற்றும் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கவேண்டும். பழைய கூளங்களை நீக்கிவிட்டபின் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தேவைப்படின் சிறிய அளவில் பூச்சிக்கொல்லியைப் புதிய கூளங்களுடன் கலந்து பயன்படுத்தலாம். மாலத்தியான் போன்ற மருந்தை தெளித்தோ, தூவிவிடுவதன் மூலமோ பேன், உண்ணி போன்ற ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தலாம்.

அடைக்காக்கும் வீடு


அடைக்காக்கும் இடம் அதிகத்தூசுகள் இன்றி, மழை மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து குஞ்சுகளுக்குப் பாதுகாப்புத்  தருமாறு இருக்கவேண்டும். அடைகாப்புக் கொட்டிலில் கம்பி வலை பொருத்தப்பட்ட ஜன்னல்கள் அமைப்பது நல்ல காற்றோட்டத்திற்கு உதவும். அதிகத் தூசுகள் குஞ்சுகளுக்கு தூசுகளற்ற மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுத்தும். அதே போல் அதிக ஈரப்பதமும், கண் மற்றும் மூக்குக்குழலை பாதிக்கும் அம்மோனியா வாயு உற்பத்திக்கு வழி வகுக்கும். எனவே நல்ல தூசுகளற்ற காற்றோட்டத்துடன் கூடிய கொட்டகையை அடைகாக்கும் இடமாகப் பயன்படுத்தவேண்டும்.